10/9/10

மாற்றமடையும் வாழ்க்கை முறையால் சமுகம் எதிர்கொள்ளும் ஆபத்து

டாக்டர் வெ.நாகநாதன்
.....................................................................................................................................................................
இலங்கையில் 40 ஆயிரமத்துக்கும்அதிகம் விப்சாரிகள் உள்ளனர் என்று அண்மையில் வெளியான தகவல்கள் அதிரவைக்கின்றன இன்னும் அவை 500 பேரில் ஒருலர் விபசர்ரத்தில் ஈடுபடுவதாகவும் உறையவைக்கின்ற்ன அதுதாண்டி சரியாகக் கணக்கிட்டால் ஒருலடசத்தை விஞ்சிவிடுவார்கள் என்றும் அடுக்கிக் கொண்டே நகர்கின்றனர் அவர்களில் எயிட்ஸ் தொற்றியவர்கள் இத்தனை பேர் இவை எல்லாம் கேட்கவே தலை விறைக்கவைக்கினறவை ஏனெனில் சாதாரணமாக பார்ப்பின் பண்பாடு கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிட்டது என்றில்லை இத்தனை பேர் வாலிபத்தின் பின் வெறுமையாகப் போகின்றனர.;.. குறித்த வயது எல்லையின் பின்னர் நடுத்தெருவுக்கு வரப்போகின்றனர் என்றால் கண்ணீர் தான் விட வேண்டும் இவர்கட்கு எப்படித்தான் புனர்வாழ்வு யார் தான் கொடுப்பாரே.. வறுமை தான் இவர்களை இங்கு தள்ளுகின்றதென்றால் இன்னும் கொடிய வறுமையுள் வீழமலே வீழ்ந்து விட்ட கொடுமை பற்றி சிந்திக்கவேண்டியே உள்ளது. பொருளாதாரத்தை ஈடுசெய்யும் நோக்கில் பெண்களும் கைச்செலவுக்காக யுவதிகளும் பதவிகள் சலுகைக்காகவும் என்று நகர்கின்ற விபச்சாரத்தின் வர்ணம் ப+சிய பக்கங்களே வெளித்தெரிகின்றன இவர்களின் வறுமை தோய்ந்த வயோதிபம் பற்நி எவரும் கதைப்பதே இல்லை எந்தவொரு நாட்டிலும் பாலியல் தொழிலாளர்கட்கு ஓய்வுதியம் கொடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை.       மேலைத்தேய நாகரிகத்தின் ஆளமைக்குள் எமது சமூகமும்; மெல்ல மெல்ல நகர்வதை நாம் காண முடிகின்றது. நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் காதல் மற்றும் காதலை அண்டியதாக மேலைத்தேய பாணியில் அமைந்த (dating) பொழுது போக்கு வாழ்க்கைமுறை இளவயதினரை மிகவும் கவர்ந்து வருகின்றது.       இவ்வாழ்க்கை முறை எமது சமூகத்தினுள்ளும் நுழைகின்றது. இது பற்றி கவனம் செலுத்த வேண்டிய தேவை யாவருக்கும் உரியதே சினிமாப்பாடல்கள் தொடக்கம், சின்னத்திரை வரை காதலை மையமாகக் கொண்டே நகர்கின்றது. அது மட்டுமல்லாது பாடல்வரிகள் கூட மீசைவைத்த செடிகொடியா? ஆசை உனக்கில்லையா என்று உசுப்பேத்துவனவாகவே அமைகின்றன. இவை தாண்டி ஒரு கொக்கோகோலாவில் இரு குழாய் வைத்து என்று தீயை மூட்டும் தன்மையைத்தான் காண்பிக்கின்றன.இதை விஞ்சி வண்டே மட்டும் கேள் பிரன்டா வாறிய என்றெல்லாம் விபசாரத்திற்கு விருந்துவைத்தால் நிலைமை என்னவாகும்.       மனித வாழ்க்கைக் காலத்தை பார்ப்பின் எண்பது வயது வரையும் வாழும் பெண்ணை எடுத்துக் கொண்டால் இவரது வாழ்வில் உதாரணமாக பாலியல் ரீதியாக உச்சதொழிற்பாட்டை 30-45 வரையில் கொண்டிருப்பினும் மிகுதியான காலம் சுமார் 35 வருடங்கள் மந்தமான அதாவது பாலியல் செயற்பாட்டின் செயற்திறன் குறைவடைந்து உள்ளதை அறியலாம்.      இது எவ்வாறு இருக்க மேலைத்தேய வாழ்க்கை முறை பாலுணர்வுகட்கு தீனிபோடுவதாக அன்றி விருந்து கொடுப்பது போன்ற விதமாகவே உள்ளது. இதனூடு கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெற்றோர் அற்ற சிறுவர்கள் வாழ்க்கைத் துணை அற்ற பெண்கள் என்று மிகவும் பாரதூரமான பக்கங்களையே நமது நாட்டில் உருவாக்கிச் செல்கின்றது. இவை மேலும் விபச்சாரம் சிறுவர் துஷ்பிரயோகம் என்று பெரும் விசவிருட்சங்களையே ஆணிவேருடன் மண்ணில் நிலைகொள்ளச் செய்கின்றன.       மேலும் எது சரி எது தவறு என்று கூற முடியாத அளவுக்கு தவறுகளையே கலாச்சாரமாக மாற்றும் ஈர்வையே உள்ளது. உலகமயமாதல் என்று கூறிக்கொண்டு கிராமத்தை விட பிற்பட்ட ஒரு வாழ்வு அதாவது கிராமப்புறங்களில் முன்பு அடிதடி, விபச்சாரம் என்பன காணப்பட்டன. எனினும் அவை தற்போது நாகரிகம் மிக்கவர்கள் என்று கூறிக்கொண்டு நகரவாழ்வில் அடிதடி ரவுடிஷம் என்றும், விபச்சாரம்   dating livetogether   என்றும் பெயர் கொண்டு அன்பு, பண்பு, பாசம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் சிதையேற்றி தீ வைக்கும் மேலைத்தேய வாழ்க்கைமுறை.      ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கு போது மனதை உறுத்துவதாகவே உள்ளது. ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கும் போது மனதை உறுத்துவதாகவே உள்ளது ;ஒரு பெண்ணின் ஆயுட் காலம் 45 வயதுடன் முடிவடையும் என்றால் மேலைத்தேய வாழ்க்கை முறையை வரவேற்று அதற்கு விருந்து வைக்கலாம் எனினும் அவ்வாறில்லை ஒரு பெண்ணின் ஆயுட்காலம் 80 வயது எனக் கொள்ளின் 45 வயதின் பின்னான காலம் வெறுமையாகவே காணப்படும். இதைவிட மேற்படி வாழ்க்கைமுறையைபெரிதும்  கையாளும் வர்க்கம் பாலியல் தொழிலாளர்கள் என்றே கூறலாம் இவர்கள் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதியை தனிமையிலும் வறுமையிலுமே கழிக்கின்றனர்.               ஒரு பெண்ணின் உடற் தொழிற்பாட்டை எடுத்து நோக்கும் போது மாதவிடாய் என்பது முக்கியம் பெறுகின்றது. அதுபோல மாதவிடாய் நிறுத்தம் என்பதும் அதைவிட முக்கியம் பெறுகின்ற ஒரு விடயமாகும். இதன்பின் (மாதவிடாய் நிறுத்தத்தின்) ஒரு பெண்ணின் உடல், உள ரீதுpயாக பல அசௌகரியங்கள் உணர ஆரம்பிக்கப்படுகின்றன. இவை    post menopausal syndrome எனப்படும். அதாவது…      உளரீதியாக… •         பதற்றமடையும் தன்மை, •         மனதில், ஆறதலின்மை, •         தூக்கமின்மை, •         எதிலும் கவனம் செலுத்த முடியாமை, •         மனதளர்ச்சி, •         இலகுவில் சினமுறல், •         நெருக்கீட்டு தாக்கங்கள் மற்றும்      உடல் ரீதியாக..  •         அதிககளைப்பு, •         மூச்செறிதல், •         உடல் நிறை அதிகரித்தல், •         உடல் உஷ்ணமாகி இருத்தல். •         அத்துடன் சிலருக்கு உடலில் எரிவு இருப்பதாக உணர்தல்    இவற்றோடு     பாலியல் ரீதியாக…  •         பெண் உறுப்பின் நெகிழ்தன்மை குன்றல் வரட்சியடைதல் போன்றவற்றுடன் •         உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படும் இவற்றூடு பார்க்கின்ற போது மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்த மட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. மேலும் பெண்ணின் பாலியல் ரீதியான உடற்தொழிற்பாடும் மாதவிடாய் நிறுத்தத்துடன் ஏற்படும் ஓமோன் பற்றாக்குறையால் எல்லைப்படுத்தப்படுகிறது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண் துணையை தேடும் மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும், பாதுகாப்பையும் வழங்கக் கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றனர். இவர்கள் இந்நிலையை அணுகும்போது இவர்களின் வாழ்க்கை முறையால்.. இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப் போன ஆண்கள் இளம் யுவதிகளை நாடுவதாலும் இன்னும்     dating livetogether போன்றவை குடும்ப வாழ்க்கை முறை, திருமணம், குழந்தை என்னும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொளளாத ஒரு தன்மை உடையதால் இவ்வாழ்க்கை முறையினூடு குறித்த வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.      இவ்வாறான வாழ்க்கை முறையின் தன்மையை அறிந்தும் அறியாமல் நம் சமூகத்தில் நகரை அண்டிய கற்றவர்கள் பெரிதும் தமது தொழில் நிமித்தம் உதாரணமாக நகரத்தில் தொழில் புரிவோர் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து தமது செலவுகளை பகிர்ந்து கொண்டு வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் பின் இவர்களில் எவராவது ஒருவர் வேலையில் இடமாற்றம் பெறின் புதிய இடத்தில் அவ்வாறான வாழ்க்கையை அமைப்பதும், புதிய துணையை தேடிக்கொள்வதும் என்று livetogether வாழ்க்கை முறையும். இவ்வாறான வாழ்க்கை முறையினுள் விபச்சாரதொழிலை மேற்கொள்ளும் பெண் தனக்கென ஒருவாழ்வு வேண்டும் என்று எண்ணுவதற்கு வேணடிய தேவை இருந்தால் தானே எதோ தனது உடற்ரேவைகள் நிறைவடைந்து விட்டன எண்ணம் குடும்பம் கத்தரிக்காய் எல்லாம் எதற்கு சுற்றித்திரியும் காற்று எதற்கு நான் துவிச்சக்கரவண்டி சில்லினுள் மாட்டிக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு குஷியான வேலையில் திரியும் போது அவ்வளவிறகு சிந்திக்க முடியாது காலம் கடந்த பின் பொதுவாக குழு முறைப்பாலியலில் ஈடுபடும் பெண்கட்கு தமது உடலே ஓரு வெறுப்புக்குரிய பொருள் என்று எண்ணும் மனநிலைதான் உருவாகின்றது எனின் அனுபவசாலிகளின் வயோதிபகாலம் பற்றி அவர்கள் நூல் எழுதினால் தான் தெரியும் விபச்சாரம் செய்யும் பெண்கள் அதை மெருகேற்றி dating செய்கின்றதாககருதுகின்ற கொடுமை. எங்கே அவர்களை தம் முன்னோரின் துன்பசாகரத்தை பற்றி சிந்திக்க விடும் ஒரு பிரச்சனை பற்றி கதைப்பதாயின் அப்பிரச்சனையினுள் இருப்பவனின் கண்களுடாகத்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பார்க்கின்ற போது அவர்களின் உணர்வு நிலையை ;  நினைவிழந்ததென்றே amnestic   கருத கூடியதாகின்றுது இவ்வாறுபட்ட நிலையில் குடும்பம் பற்றி நினைப்பதே பிற்போக்கு என்பது அவர்களின் வாதம்  குடும்ப வாழ்வு என்று கருதுமிடத்தில் பாலியல் ரீதியாக அன்றி பாசப்பினைப்பினுடான வாழ்க்கை காலமே பெரியதொரு வருடகாலம் என்ற நிலை காணப்படுகின்றது பாலியல் என்பது வாழ்வின் சுவையூட்டி என்றே அமைகின்றது        பாலியல் தேவைகளுக்கு தீனிபோடும் அல்ல விருந்து போடும்    dating வாழ்க்கை முறையும் … குறித்த வயதெல்லையின் பின் வரண்டு போய் விடுகின்றது….அதாவது வாலிபத்தின் காலம் முடிவுறுவதுடன் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. இன்னும் விபச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும் முகவர்கள் இவர்களை மருத்துவரிதியாக பரிசேதித்து தமது சேவையை செய்வுத என்புதும் வினாவாகவே அமைகின்றது மருத்துவ உலகில் கூட வியாபாரம் நுழைந்து விட்டநிலையில் விபச்சார முகவர்கள் இந்தளவில் நேர்மைத்தன்மை கொண்டிருப்புது பற்றி யோசிப்பதே சாலவும் நன்று இது இவ்வாறிருக்க எயிட்ஸ் தொற்று பற்றி கருதும் போது விபசாரிகளின் சிறப்புத்தேர்ச்சி இதனுடு எளிதில் உச்ச நிலை அடைதல் இதனால் மிகையளவு இனப்பெருக்கச் சுரப்பு பாதுகாப்புறைகளை தாண்டும் நிலை ஏற்படாமல் இருப்புது அரிது  இதனால் மனைவியிடம் எதிர்பார்த்த இன்பத்தை விட மேலதிக கொடுப்பனவாக எயிட்ஸ் கிடைப்புது பெரும் வெகுமதி என்றே கூறவேண்டும் .இவ்வாறு கொடிய தொற்றுநோய்களையும் கருப்பை சார் புற்றுநோய்களையும் விபசாரம் வெகுமதியாய் கொடுக்கும் என்பது அறிந்தும் அறியாததே என்றே உள்ளது இன்னும் கூறுவதானால் விபசார விதைகள் தூவப்படும் சமுகத்தில் நோயுடன் கூடிய ஆரோக்கியமற்ற தன்மைமேயே பலித விளைவாகி சமுகம் நலிவுற்றுப் போகும்

10/1/10

எயிட்ஸ் நோயை எதிர் கொள்ளுமா?.... எம்மினம் ….

இந்தநிலை இனி எந்த மண்ணிலும் வேண்டாம்

டாக்டர் வெ.நாகநாதன்

டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரணம் தான் இருக்கும் என்னும் நிலையே உள்ளது

மேலும் திடீர் மாற்றங்கள் உருவாகியதன் பலித விளைவு திறந்த பாலியல் கலாசாரத்தை திணித்து விட்டதென்றால் தவறில்லை எதிர் கொள்ளமுடியாத உணர்வுத்தடுமாற்றம் இளம்சந்தியினரை மிகவும் பாரதூரமாக பாதிக்காது இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கூறவேண்டும் எமது மக்கள் மத்தியில் கலாச்சாரகட்டமைப்பு என்பது முற்றுமுழுதாகவே சிதைக்கப்பட்டு விட்ட ஒரு நிலை விரும்பியோ விரும்பாமலோ வாங்கிக்கொணட பரிசாகவே உள்ளது இத்துடன் எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வும் அருகிவிட்டது எயிட்ஸ் நோய் பற்றிய அச்ச உணர்வும் குன்றிவிட்டது எயிட்ஸ் தொடர்பான பதாகைகள் கூட ஒளியிழந்துவிட்டன இதற்கு காரணம் முன்பிருந்த சூழ்நிலை இதன்போது மிகவும் இறுக்கமான கலாச்சார கட்டமைப்பு காணப்பட்டது இதனால் விழிப்புணர்வு பற்றி அதிகம் யோசிக்கவேணடி ஏற்படவில்லை எனறே கூற வேண்டும்

பரீடசை அறை தொடக்கம் பாடம்  கற்கும் இடம் வரை பாலியலே செய்முறை சோதனை என்னும் காலமாகிவிட்ட நிலை….கல்வி குற்றிழந்து கலவியாகி…. ;கற்றதற்கு மாறாய் ஒழுகும் கணவான்கள் அது தாண்டி பாலியல் தொழிற்சாலை போன்று வளம் பெற்றுவிட்ட தொழிற்றுறை ..கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன வல்லுறுவுகள் பல காதல் என்னும் பெயரில் மாங்கனி உண்ணும் பஞ்சபாண்டவர் போன்று மாறிவிட்டன அனேகமான காதல்கள்… கருத்தடை மாத்திரைகள் தட்டுப்பாடடில்..சட்டம் தூங்கும் நிலையில் ..கற்பை பறிகொடுத்த யுவதி தீயில் வீழ்வதா இல்லை கண்ணீரிலா..

இன்னும் பலபடி நகர்ந்து வேற்று கிரகவாசிகள் விபச்சாரத்திற்காக வந்திறங்கிய காட்சிகள் போன்று ஆடைக்கலாச்சாரம் அது ஊருடுவிவிட்ட உயிர்கொல்லியாகவேமாறிவிட்டது. இந்நிலையில் போதையென்றால் எல்லாம் கிடைக்கும் தாராளம் அப்படிப்பட்ட தன்னிறைவு.

இங்கு உணர்விழந்து அன்னியச்செலாவணியின் செழுமையுடன் அலையும் இளைஞர் கூட்டத்திற்கு அமிர்தம் வார்ப்பது போன்று அழகான பறவைக்கு அறிமுகம் வேண்டுமா என்ற தப்பான எண்ணத்தில் தப்பிக்க வழிகளிருந்தும் மூழ்கின்ற நிலையில் பாலியல் நரகத்தில் அமுதென்று விசம் பருகுவதுபோன்று எயிட்ஸ் நோயின் பிடியில் சிக்குவதாய் …எனின் வலசைபோகும் பறவை வழிதோறும் எத்தனை தெருக்கரை பிச்சைக்கார்க்கு கற்பை பிச்சையிட்டிருக்கும் என்று எண்ணிக் கொள்ள முனைந்தால் எவ்வளவு நல்லது

மருத்துவம் வியாபாரமாகி.. தொண்டுடன் தொடரபுடையோர் நிலை தவறி ஏதோ தேசத்தில் நுழைவதாய் ஒருபுறம். மேலைத்தேயகலாசாரம் உடை தொடக்கம் நடைவரை ஆக்கிரமித்துவிட்டது. மக்கள் கையிறு நிலையில் இளைஞர்கள் மேய்ப்பானற்று மந்தைகளாகி உயர்பதவிகளில் உள்ளேர் கேள்விகளை மட்டுமன்றி விடைகளுடன் சென்றால் விடை சொல்கின்ற அறிவுத்திறனுடனும் பழிவாங்கலுக்கு பயந்து பாலியல் தீயில் வீழ்கின்ற துன்பியல் இவை யாவும் முகவரி தொலைத்த மனிதன் படும் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்

இவ்வாறன நிலையில் மருத்துவதுறை மட்டும்போதாது மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு அடையவேணடியது காலத்தின் தேவையாகும்.

அன்றேல் டெங்குநோய் பற்றி தற்போது உள்ள நிலையைவிட மிகமோசமான நிலையை எதிர்கௌ;ள வேண்டியே அமையும் முன்பு டெங்குநோய்க்கான கிருமி எமது குருதியில் காணப்படவில்லை என்றால் ஏற்கககூடிய விடயம் எனறே கூறவேண்டும் ஆனால் தற்போது எமது குருதியில் இல்லை என்று சொல்ல முடியாத விடயமாகிவிட்டது அவ்வாறே எயிட்ஸ் நோயின் பரவல் காணப்படும் நிலையே உள்ளது எனினும் எயிட்ஸ்  குறித்து கருதின் காலவோட்டத்தில் சுமார் பத்துவருடங்களில் பெரியதொரு குடித்தொகை நோயின் பிடியில் சிக்கிவிட்ட பரிதாபத்தை அறியலாம். எனெனில் .இங்கு டெங்கு போனறல்லாது எயிட்ஸ் நோய்க்குரிய கிருமிதொற்றி பல வருடங்களின் பின்பே அறிகுறிகள் தென்படுவதே வழமை இதனாலே இவ்வாறு அமைகின்றது அதாவது சில சமயம் ஜந்து ஆறு வருடங்களில் அறிகுறி தென்படலாம் நோயாளியின் நீர்;ப்பீடணத்தின் வீரியத்தை பொறுத்து இந்நோய் சுமார் பதினைந்து வருடங்களின் பின் கூட இனம்காணப்படலாம்

தற்போது கவனக்கலைப்பான்கள் அதிகரித்து விட்டன பாலியல்ரீதியான ஈர்வை மிகக் கூடி விட்டது இதைவிட சீரழியும் சமுகத்திற்கு சொன்னால் விளங்காது எனினும் விழிப்புற தவறின் பாவம் அறியாதவர்களாய் சில நோய்நிலை அதாவது குருதிப்புற்று நோய் குருதியுறையாநோய் உடையவர்கள் குருதி மாற்றிட்டின் போதுதொற்றுக்கு உள்ளாவது எயிட்ஸ் நோயின் வரலாற்றை புரட்டிப்பார்பின் அறியலாம் இன்னும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தொடக்கம் தாதியர் ஆய்வுகூட பரிசேதகர் வரை குருதியினுர்டு தொற்றை பெற்று எளிதில் நோயாளியாகும் ஆபத்தான பாதையில் பயணிக்கவேண்டியது காலத்தின் வெகுமதி என்றே ஆகிவிடும் எயிட்ஸ்நோயாளி ஒருவரை கையாளும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் இனம் காணப்பட நோயாளியை கையாளும் போது கடைப்பிடிக்க தவறும் போது ஏற்படும் பரிதாபத்தையே சுட்டி நிற்கின்றது

பொதுவாக எயிட்ஸ் நோய் தொற்றுடையோர் இனம் காணப்படும் போது அவரால் தொற்றுக்குஆளான பலர் .இருப்புது சகஜம் மேலும் பாலியல் உணர்வென்பதுநோய் பற்றி சிந்திக்குமா என்பது விடை காணமுடியாத வினாவேயாகும் .இன்னும் போதையில் உடற்சுத்தம் மறந்த நிலை மற்றும் தம்மை தாமே காயப்படுத்தும் மனநிலை இந்தநிலையிலா…????. ஒருவர் பாதுகாப்பான உடலுறவிலா …?? ? நகைப்புக்குரிய விடயமல்லவா அது

மேலும் போரின் பின் பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் விதவையாக்கப்பட்டநிலை இதை மெருகேற்றும் வண்ணம் போரில் ஆண்கள் கொல்லப்பட்டமை அத்துடன் வாழ்வில் முதன்முதலாக வேலை தேடி செல்கின்றனர் இவை யாவுமே விரும்பியோ விரும்பாமலே பாலியல் பண்டத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாகின்ற நிலையில்  வறுமையும் வலுச்சேர்க்கும் என்றால் தவறில்லை  ஈராக் யுத்தத்தின் பின் சிரியா யோர்தானில் தஞ்சாம் புகுந்த அகதிகள் நிலை பற்றி உலகத்தின் பார்வை அவ்வாறே அமைகின்றது இதுபோலவே தலிபான்களின் வீழ்ச்சியுடன் இறுக்கமான கலாசாரம் தளர்வடைந்ததால் எயிட்ஸ் நோய்த்தெற்று எதிர்கொள்ளப்பட்டமை நடந்தேறிய விடயமே ஆகும் இவ்வாறன நலிவுற்ற நிலைகளை இலக்காகக் கொண்டு பாலியல் தொழில் முகவர்களும் நகர ஆரம்பிக்காமல் இருப்பார்கள் என்றால் அது மடமைத்தனம் எனறே கூறவேண்டும். எயிட்ஸ் பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம் போரின் பின் எம்மினம் பெரியதொரு திறந்த கலாசாரத்தினுள் நுழைந்து ஓரு வருடம் கடந்துவிட்டது கண்ணுக்குதெரியா பெரியதொரு அழிவை எதிர்கொள்கிறது ஆகவே காலம் கடந்தபின் எனினும்  ..எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு உருவாகுமா அன்றேல் தொற்று தன் முழு வீச்சத்துடன் பரவிவிடும் என்புதெ உறுதி இதன் பின் மருத்துவத்துறையால் எயிட்ஸ் நோய்க்கட்டுபாடு என்பது அவ்வளவு சுலபமானதாக அமையமாட்டாது இன்னும் மருத்துவத்துறையால் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கோடிட்டுகாட்டப்படும் விடயமாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து கூட நோயின் தீவிரத்தன்மை குறைக்குமேயன்றி குணப்படுத்த மாட்டாது எனவே இக்கொடிய நோயின் விசமத்தனமான பரவல் கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு யாவர்க்கும் உரியதே

                ’பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம் ஆனால்
            விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும்.’